ஈரானுடனான போரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கே திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் ஒருமுறை ஒரு முழு நாகரிகத்தையே அழித்துவிடுவேன் என்று அவர் அச்சுறுத்தியதைப் போன்றே தற்போதைய நகர்வுகளும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவெளியில் ஈரான் தொடர்பான விவகாரங்களைத் தீவிரப்படுத்துவது, கடுமையான காலக்கெடுவை நிர்ணயிப்பது மற்றும் பெரும் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்துவது மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சிறிய வாய்ப்பையும் திறந்து வைப்பது என்பன ட்ரம்பின் அடையாளமாக மாறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய நிகழ்வு மிக விரைவில்

கடந்த 24 மணிநேரத்திற்கு முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் ‘புரொஜெக்ட் ஃப்ரீடம்’ நடவடிக்கையை ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மேற்படி நடவடிக்கைகள் இது ஏதோ ஒரு பாரிய நிகழ்வு மிக விரைவில் நடக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞைகளை உறுதிப்படுத்துவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments