உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை நினைவுகூர்வதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், சிறிலங்கா உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை நாங்கள் நினைவுகூருகிறோம்.
அத்துடன் கனடாவின் தமிழ் புலம்பெயர்ந்தோர் உட்பட பெரும் துயரங்களை எதிர்கொண்ட உயிர் பிழைத்தவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தாயகம் தொடக்கம் சர்வதேசம் வரை நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
On Tamil Genocide Remembrance Day, we honour the tens of thousands of civilians killed during the Sri Lankan Civil War and stand with the survivors, families, and communities who endured profound suffering including many in Canada’s Tamil diaspora.
·