பிரித்தானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக இருந்தபோது பிரித்தானியாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்தவர் 31 வயதுப் பெண். இவர் வடக்கு ஷீல்ட்ஸ் (North Shields) பகுதியில் கடை ஒன்றை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக நடத்தி வருகிறார்.

 கடையை விற்க முடிவு செய்துள்ளேன்….

தனியாக இருக்கும் தன்னை எளிய இலக்காகக் கருதி, கடந்த நான்கு வருடங்களாகச் சில சமூக விரோதிகள் தொடர்ந்து திருட்டுகளிலும் இனவெறித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்ததாக அவர்   வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(25)  ஒரு ஆணும் பெண்ணும் மீண்டும் அவரது கடையில் திருட முயன்றுள்ளனர். உடனடியாக , சாதுரியமாகச் செயல்பட்டுக் கடையை விட்டு வெளியேறி, அதன் கதவுகளைப் பூட்டி ஷட்டரையும் இறக்கினார்.

அதோடு  திருட வந்த இருவரையும் கடையின் உள்ளேயே ஒரு மணி நேரம் அவர் சிறை வைத்து உடனடியாகப் போலீசாருக்கு அவசர அழைப்பு விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் கடையின் ஜன்னல்களை உடைத்து, உள்ளிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மேலும், டர்பைன் டைன் (Turpentine) என்ற தீப்பற்றக்கூடிய திரவத்தையும் கடையினுள்ளே ஊற்றியுள்ளனர். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை நடவடிக்கை சம்பவ இடத்திற்குத் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர்.

இந்த நடவடிக்கையை அடுத்து உள்ளே சிக்கியிருந்த ஆணும் பெண்ணும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.   இந்தச் சம்பவத்தால்   கடைக்குச் சுமார் 3,000 பவுண்ட் மதிப்பிலான பொருட்களும், ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்பிலான சேதமும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில்   நான் போரைக் கண்டு வந்தவள், அமைதியாக வாழவே இங்கு உழைக்கிறேன். பூனைக்குட்டிக்குக் கூட பயப்படும் நான், அன்று என் அறிவைப் பயன்படுத்தி அவர்களைப் பூட்டினேன். ஆனால், இந்தத் தொடர் தொல்லைகளால் என் கடையை விற்க முடிவு செய்துள்ளேன், என பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments