அமெரிக்காவிற்குச் சொந்தமான பனாமா கொடியுடன் கூடிய ‘எம்எஸ்சி சரிஸ்கா V’ (MSC Sariska V) கொள்கலன் கப்பலை ஒரு குரூஸ் ஏவுகணையால் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் காவல் படை தெரிவித்துள்ளது.
ஓமானுக்கு அருகே ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே, புரட்சிகரப் பாதுகாப்புப் படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
இதற்கிடையில், வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்று, உம் கஸ்ர் துறைமுகத்திற்கு தென்கிழக்கே சுமார் 40 கடல் மைல்தொலைவில் ஏவுகணை ஒன்றினால் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு முன்னதாகத் தெரிவித்திருந்தது.

எனினும், அந்தத் தாக்குதலுக்குள்ளான கப்பல் எது என்பதை UKMTO இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
