ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தான் பைத்தியக்காரர் என்று அழைத்ததை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

திங்களன்று நடந்த தொலைபேசி அழைப்பில் நெதன்யாகுவை நோக்கி, “நீ ஒரு பைத்தியக்காரன், நான் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பாய். நான் தான் உன்னைக் காப்பாற்றி வருகிறேன். தற்போது உன்னால் ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலை வெறுக்கிறது” என்று ட்ரம்ப் வசை பாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை நேர்காணல் ஒன்றில் உறுதிப்படுத்திய ட்ரம்ப், தான் கோபமாக அவ்வாறு கூறவில்லை என்றும், லெபனானுடன் இஸ்ரேல் தொடர்ந்து சண்டையிட்டு வருவது தனக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியதால் அவ்வாறு கூறியதாகவும் விளக்கமளித்தார்.

ட்ரம்புடனான உறவு

மேலும், “நாம் இந்தச் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தாம் வலியுறுத்தியதாகக் கூறிய ட்ரம்ப், இருப்பினும் தங்களுக்குள் நல்ல நட்பு நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீ ஒரு பைத்தியக்காரன்!!நெதன்யாகுவை நேரடியாக வசை பாடிய ட்ரம்ப் | Trump Admitted That He Called Netanyahu A Madman

ட்ரம்பின் இந்த கடுமையான விமர்சனங்கள் குறித்து பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உரையாடலின் முழு விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். எனினும், ட்ரம்புடனான தனது உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments