பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதன் தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என அழுதார் என மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.
இன்று(04.06.2026) காலை சங்கீதனை சிறையில் சந்தித்த போதே இவ்வாறு கூறியதாக, அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது குறிப்பிட்டுள்ளார்
குறித்த பாடகர் தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
