தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது உயிரிழந்துள்ளார். தமிழ் சமூக வரலாற்றின்ஒரு அத்தியாயம்.கலைக்காக மட்டுமல்ல,மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் கமராவை ஏந்திய அந்தக் கலைஞனின் இழப்பு, தமிழ் பண்பாட்டிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.‘16 வயதினிலே’
மூலம் இயக்குநராக அறிமுகம்
1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்
நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரின் திரையுலகப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் பாரதிராஜா. அவர் இயக்கிய முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன.
நடிகராகவும் முத்திரை பதித்தவர்
இயக்குநராக மட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளில் நடிகராகவும் பல படங்களில் நடித்துவருகிறார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் வந்தவர்.
பாராதிராஜா மறைவு: ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் இரங்கல் தமிழ் திரையுலகில் “இயக்குநர் இமயம்” என்று போற்றப்படும் பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அவரது மறைவுக்கு ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்![]()
![]()



