போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் திட்டமிட்டபடி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் நகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடி கொடுக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை ஆகியவற்றுக்கு மத்தியிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த சூழலையும் உலுக்கியுள்ளது இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாவது சில மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்

உண்மையில் இந்நேரம் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்க வேண்டும் ஆனால் தற்போது இன்னும் சில மணித்தியாலங்களில் கையெழுத்தாகும் வகையில் இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்துத் தனது ஆலோசகர்கள் தனக்கு விளக்கியபோது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது தான் கடும் கோபமடைந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement

இஸ்ரேலின் முட்டுக்கட்டையை உடைக்கும் ட்ரம்ப்! கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம் | Trump Says Us Iran Peace Deal Signed Today

இருப்பினும் ஈரானுடனான இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே அமையும் எனத் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் இந்த ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதுடன் அங்குள்ள அணுசக்தி மூலப்பொருட்களை முழுமையாக அழிப்பதற்கும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை எப்போது வேண்டுமானாலும் திடீர் சோதனைக்கு உட்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments