அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தனது செல்லப் பிராணியான நாயை நோக்கிச் சத்தமிட்டு அதட்டிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
செய்தியாளர் தீவிரமான அரசியல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த வேளையில், கெமராவிற்கு அப்பால் குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து, கீழே உட்கார் (Sit down) எனத் திடீரென உரத்த குரலில் கத்தினார்.
சர்வதேச அரசியல்
காரசாரமான விவாதமும் நாயின் குறுக்கீடும் ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பாலின் ஹேன்சன், பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சனைச் சந்தித்தது தொடர்பாகவும், சர்வதேச அரசியல் சூழல்கள் குறித்தும் செய்தியாளர்
அந்த நேரத்தில் நாயின் குறுக்கீட்டால் கவனச்சிதறல் அடைந்த பார்னபி ஜாய்ஸ், செய்தியாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பேட்டியைத் தொடர முயன்றார்.
இருப்பினும், தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் “தயவுசெய்து மரியாதையாகப் பேசுங்கள், இல்லையென்றால் இந்த நேர்காணல் பாதியிலேயே நின்றுவிடும்” என்று கோபத்துடன் செய்தியாளரை எச்சரித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
நேரலையில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம், தீவிரமான அரசியல் விவாதத்தின் இடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நேர்காணலின் காணொளி, தற்போது சமூக வலைத்தள பயனாளர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
