யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி ஆய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சான்றுகளை வெளிக்கொண்டுவரும் ஒரு முக்கிய களமாக இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த விஜயம், இலங்கையில் நிலுவையில் உள்ள போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் உண்மை கண்டறியும் செயற்பாடுகள் மீது சர்வதேச சமூகம் செலுத்தும் தீவிர கவனத்தை வெளிப்படுத்துகிறது.

சர்வதேச பிரதிநிதிகளின் நேரடி கண்காணிப்பு, இந்த ஆய்வு நடவடிக்கைகளைத் திசைதிருப்பாமல் வெளிப்படைத்தன்மையுடனும், நடுநிலையாகவும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தை இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பல்லாண்டுகளாகத் தங்களின் உறவுகளைத் தேடி அலையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, சர்வதேசத்தின் இந்த தலையீடு மற்றும் கண்காணிப்பு முறையான நீதியைப் பெற்றுத்தருமா என்ற பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

சவூதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்...! ட்ரம்பின் அதிரடி தீர்மானம்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments