ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ஈரானிய கடல் எல்லைக்குள் நுழைந்தபோது “விரோத சக்திகளால்” குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘திஷா’ என்ற எண்ணெய் கப்பல் ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.

ஈரானிய கடலோர காவல்படைக்கு ஆபத்து அழைப்பு

“இந்தச் சம்பவம் நடந்தவுடன், கப்பல் உடனடியாக ஈரானிய கடலோரக் காவல்படைக்கு ஆபத்து அழைப்பை அனுப்பியது,” என்று இந்தியாவிற்கான ஈரானின் தூதர் முகமது ஃபத்தாலி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான் | Iran Rescues 28 Indian Seafarers

“இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் தாமதமின்றி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments