உக்ரைன் மீது நடந்த தீவிர ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கத்திய வான் பாதுகாப்புக்கான தனது வேண்டுகோளை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ரஷ்யா 27 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் ஒன்று மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய தரப்புப்புகள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் பேட்ரியாட் இடைமறிப்பு விமானங்களைத் தயாரிக்க அனுமதிப்பதாகஅளித்திருந்த பகிரங்க வாக்குறுதியிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா நடத்திய  பெரிய வான்வழித் தாக்குதல்

கடந்த இரண்டு நாட்களில் ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.

பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள் | Trump Backtracks Security Promise Rus Ukraine War

Advertisement

பரந்த போர்முனையில் முன்னேறுவதற்கு உக்ரைன் போராடி வரும் நிலையில், அங்குள்ள முக்கிய பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறையை அம்பலப்படுத்தவே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்துவதாக இராணுவ தரப்புகள் அறிவித்துள்ளன.

உக்ரைன் மீதான சமீபத்திய தாக்குதலில், தலைநகர் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர மேயரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments