Trisha new post viral:நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

“இந்த வயதில் நாடகம் போடுவது சங்கடமாக இருக்கிறது.. போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்” என அவர் பதிவிட்டிருப்பது, அது யாரை நோக்கி கூறப்பட்டது என்ற விவாதத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷ

த்ரிஷா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.

நடிகரும் முதலமைச்சருமான விஜய்யுடனான த்ரிஷாவின் நட்பு குறித்த சர்ச்சைகள் இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் நிலையி்ல், விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து த்ரிஷா வெளியிடும் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகின்றது.

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை! | Drama At This Age Trisha Insta Post Goes Viral

சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி, நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பேசியிருந்தார். குறிப்பாக, விஜய்–த்ரிஷா இடையேயான உறவு குறித்து அவர் தெரிவித்ததாக கூறப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டன. இதன் பின்னணியில் த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள “இந்த வயதில்…” என்ற பதிவையும் சிலர் இணைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை வைத்து, அவர் வயதான ஒருவரை விமர்சித்திருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால், இந்தப் பதிவு குட்டி பத்மினியின் சமீபத்திய பேச்சுக்கு த்ரிஷா அளித்த மறைமுக பதிலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சமீபத்தில் த்ரிஷா குறித்து பேசியிருந்ததும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவரது பேச்சும் பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்ட நிலையில், த்ரிஷாவின் புதிய பதிவு அதற்கு பதிலாக இருக்குமா என்ற யூகமும் உருவாகியுள்ளது.

குறிப்பாக, த்ரிஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ள “இந்த வயதில்” என்ற வார்த்தையை வைத்து, சமீபத்தில் தன்னைப் பற்றி கருத்து தெரிவித்த வயதில் மூத்தவர்களில் யாரையாவது அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். த்ரிஷாவின் இந்த  பதிவு யாரை நோக்கி வெளியிடப்பட்டது என்பது குறித்து நெட்டிசன்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments