மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்டகப்பட்டுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலத்தை கண்ட கடற்றொழிலாளர்கள்

குறித்த கடற்கரை பகுதியில் சம்பவ தினமான இன்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்கள் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு காவல்துறைக்கு தெரியப்படுத்தினர்.

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் | Body Of Man Washed Ashore On Batticaloa Beach

 இதனையடுத்து காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாசிக்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments