பன்னிரு வேங்கைகள் என்ற பெருமையும், தலைவரின் நாடித்துடிப்பாக இருந்தவர்களில் ஒருவருமான மூத்த போராளி லெப் கேணல் புலேந்திரன் அம்மானின் தாயார் அவர்கள் கடந்த 20/08/23 ல் தமிழர்களின் இன்னொரு தாய் நிலத்தில் வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அவருடைய வருகை, உடல் வருத்தம், மனதளவில் தீராத ஏக்கங்கள் என பல நெருக்கடிகளால் இங்கே துன்பங்களை அனுபவித்த இறுதிக்காலம், மற்றும் மரணம் என ஒரு மகத்தான மாவீரனின் தாயார் நாட்டில் இருந்து இறந்திருக்கக்கூடாதா என ஏங்கிய நேரம், அவர்கள் பெரிதும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த நா.த.க தலைமை, தலைவர் மற்றும் முதன்மை நிர்வாகியாக உள்ளூர் முதல் உலகம் வரை வரவு செலவு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் தொடர்பில் இருந்த/ இருக்கின்ற தம்பி ஒருவர் என எவருமே அம்மாவின் இறுதிக்கிரியைக்கு உதவ முன் வரவில்லை, அவர்களிடம் இருந்து வந்த அழைப்பைக்கூட ஏற்கவில்லை என்கிற துயரத்தோடு உடனடியாக நமக்கு தெரிந்த மூத்த தமிழ் ஆளுமை (நா.த.க, அவருடைய சொந்த சூழல் காரணமாக பெயரை இங்கே குறிப்பிடவில்லை) ஒருவரை தொடர்பு கொண்டு அம்மாவின் இறுதிக்கிரியைக்கு நேரில் சென்று கலந்து கொண்டு மரியாதை செய்து விட்டு வாருங்கள் என்று அதற்கான செலவுகளை உடனடியாக அவருடைய வங்கிக்கு பரிவர்த்தனை செய்து, அம்மாவின் ஆன்மா அமைதியுற நாம் துணை நின்றோம் என்கிற தகவல்கள் இங்கே தற்போதைய (present batch jombis) அரை வேக்காடுகள் நம்மை யாரென்று அறிந்திராத அறிவிலிகள் சில நேரங்களில் நம்முடைய காத்திரமான பதிவுகள் இடையே போலி முகவரியில் நுழைந்து கதறி, கடித்து வைக்க மட்டுமே பணிக்கப்பட்டவர்களுக்கு, ஏன் நாம் இவ்வளவு மூர்க்கத்தனமாக துரோகிகளின் துரோகங்களை சமரசம் இன்றி எதிர்க்கிறோம் என்பது தெரியாது என்கிற காரணத்தால் தான் பெரும்பாலும் நாம், அவர்களின் வெறுப்புகளுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றி தரம் தாழ்ந்து போவதில்லை.

இயக்கத்தின் முக்கிய, மூத்த தளபதியை ஈன்ற அன்னைக்கு எமது பணிவான மலர் வணக்கங்கள் இன்று.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.!

சுப. தனசேகரன்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments