தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறினார்.

இலங்கையில் காணாமலாக்கப்பட்டடோருக்கான விவகாரத்தில் பல்வேறு ஆணைக்குழுக்களும் நிறுவனங்களும் உறுவாக்கப்பட்ட போதிலும் எமது உறவுகளின் அடிப்படை கோரிக்கை இதுவரையில் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நம்பிக்கை இழந்த மக்கள்

ஒரு நிறுவனத்தின் சுயாதீனம் செய்தித்திறன் மீதே மக்கள் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அந்த நம்பிக்கையை உறுவாக்குவதற்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பு மிக அவசியம் எனவும் கூறியுள்ளார்.

இதன் பொருள் இலங்கைக்கு எதிரான பாதுகாப்பு மிக்க சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே ஆகும் எனவும் கூறியுள்ளார்.

00.11.00 – கனகரஞ்சனி யோகராசா உரை

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments