எதிர்தரப்புடன் இணைந்து திருட்டுச் சதியில் ஈடுபட்டு, ஈழத் தமிழர்களின் எழுச்சியை மழுங்கடித்து அரியணை ஏறத்துடிக்கும் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலர் தமிழ் இனத்தின் சாபக்கேடாக விளங்குவதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் பொ.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சங்க தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மொத்தமாக புடுங்கி எடுப்பதற்கான கடும் முயற்சியில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய மேலதிக விடயங்கள் கீழ் வரும் காணொளியில்…