யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த (தம்பையா சிவனேஷ்வரன் (வயது 42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த மனநலம் குன்றிய ஒருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் நான்கு தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பணம்பறிக்கச் சென்றவர்களின் வேலையாகயிருக்கும் என மக்கள் சந்தேகம்