தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ( P.Ariyanethiran), தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) இல்லம் அமைந்திருந்த இடத்தை பார்வையிட்டதுடன் பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.

யாழ் (Jaffna) வடமராட்சிக்கு இன்றைய தினம் (16) விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்ட பா.அரியநேத்திரனுக்கு ஆலய பிரதம குரு ஆசிகளை வழங்கியுள்ளார்.

பரப்புரைக்கூட்டம்

அங்கிருந்து வல்வெட்டித்துறை ஆலடிப்பகுதி எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் நினைவிடத்திற்கு சென்று தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியதுடன் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டை பார்வையிட்ட தமிழ் பொது வேட்பாளர் | Ariyanethiran Visits Ltte Leader Residence

இந்தநிலையில், இன்று முன்னெடுக்கப்பட்ட பரப்புரைக்கூட்டமானது தொண்டைமானாறு அம்மா மணிமண்டபத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் அமைப்பாளரும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவருமான செல்வேந்திரா தலைமையில் இடம்பெற்றது. 

குறித்த கூட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதி யரசர் க.வி.விக்னேஸ்வரன் (Vigneswaran), பொருளார் பேராசிரியர் வி.பி. சிவநாதன் (Shivanathan), ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), தமிழ் மக்கள் கூட்டணியின் அமைப்பாளர்களான த.சிற்பரன், வி.மணிவண்ணன் (Manivannan) உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *