சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுர குமார திசநாயக்க பெரும்பான்மையான இலங்கை மக்களின் ஒரு ஒப்பற்ற தலைவனாகவே பரிணாமம் பெற்றுவருகின்றார்.
ஊழலை ஒழித்துவிடுவதான அவரது பிரகடனங்கள், காலாகாலமாக இலங்கையில் ஊறிப்போயுள்ள பேரினவாதத்தைக் கக்காத அவரது பேச்சுக்கள், செயல்கள் எல்லாமே, தமிழ் முஸ்லிம் இளைஞர்களைக் கூட அவரை ஆசையுடன் திரும்பிப்பார்க்கவைத்து வருகின்றது.
அதேவேளை, அநுர மேற்கொள்கின்ற இந்த வெற்றிநடையில் இரண்டு முக்கியமான ஆபத்துக்களையும் அவர் எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது.