கொழும்பில் உள்ள பகுதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் இன்றையதினம் மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு காரில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மாதம்பிட்டியவில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... காரில் வந்து நபர் ஒருவரை சுட்டுகொன்ற மர்ம நபர்கள்! | Mysterious Persons Shot Person In A Car In Colombo

Share:

1 thought on “a 204 கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்… காரில் வந்து நபர் ஒருவரை சுட்டுகொன்ற மர்ம நபர்கள்!”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *