மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது, வெலிகம பொல்அத்த பகுதியில் நேற்று (15) இரவு தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து
தொடருந்து வருவதாக சமிஞ்ஞைகள் ஒளிரும் வேளையில் அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி லொறி தொடருந்து கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் லொறியின் சாரதியான 34 வயதான திலிப பெரமுனகே மற்றும் அவரது தாத்தா பி.கே. சுகததாச என்பவருமே உயிரிழந்துள்ளனர்.மனைவி கவலைக்கிடம்
காயமடைந்தவர்களில் உயிரிழந்த சாரதியின் 01 மற்றும் 07 வயதுடைய இரு பிள்ளைகள், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தாயார் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 34 வயதான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.