தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது ஜனன தின நிகழ்வுகள் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் மற்றும் கிராம மக்களின் ஒன்று சேர்தலுடன் பிரபாகரனுக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கியும் ஜனன தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வல்வெட்டித்துறையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

வல்வெட்டித்துறை பொலிஸார் 

இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் குறித்த புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகள் தலைவரின் வீட்டில் திரண்ட மக்கள் | 70Th Birth Anniversary Events Jaffna Maveerar

இருப்பினும் அந்த புகைப்படத்தினை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பிறந்தநான் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துங்கள் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அக்கோரிக்கையினை ஏற்ற மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் அவரின் பிறந்த நாள் நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

Gallery

GalleryGallery

GalleryGalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *