உக்ரைன் (ukrain)போரால் ரஷ்யாவிற்கு(russia) பலவழிகளிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவை எல்லாம் சரியாகி விடும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் உறுதியளித்துள்ளார்..

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை அடுத்து இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் சொத்திழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனின் மின் விநியோகம் உட்பட உள்கட்டமைப்புகளை ரஷ்யா தொடர்ந்து தாக்கி வருகிறது.

போரை முன்னெடுக்க கடுமையான பொருட் செலவு

இந்த நிலையில், இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு ரஷ்யா கடுமையான பொருட்செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதன் விளைவாக ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ரஷ்ய மக்களுக்கு புடின் அளித்துள்ள உறுதிமொழி | Putins New Year Greetings To Russians

விலைவாசி உயர்வு மற்றும் ரஷ்ய மத்திய வங்கியின் 21% வட்டி விகித நடைமுறை ஆகியவை ரஷ்ய மக்களை கவலையடையச் செய்துள்ளது.

எல்லாம் சரியாகிவிடும்

இந்த சூழலில், 2025 புத்தாண்டையொட்டி ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ரஷ்ய மக்களுக்கு புடின் அளித்துள்ள உறுதிமொழி | Putins New Year Greetings To Russians

“இந்த புத்தாண்டில், நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம். எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம், நாம் முன்னேறுவோம். ரஷ்ய மக்களின் நல்வாழ்வு என்பதே நமது முன்னுரிமை” என்று தெரிவித்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *