பாகம் இரண்டின் இரண்டாவது தொடர்
இதே காலப்பகுதிதான் எமது அமைப்பிற்கான புலிச் சின்னம் அதாவது தேசியக்கொடி உருவானது,

விடுதலைப் புலிகளின் சத்தியப்பிரமாணத்தை தெளிவாகப்படிக்கவும் இதை ஏற்றுக்கொண்டுதான் ஐம்பதினாயிரம் போராளிகளும் தங்களின் உயிரை அற்பணித்தார்கள்,
எமது புரட்சிகர இயக்கத்தின்
மேன்மைமிகு குறிக்கோளாம்
சமவுடமை தன்னாட்சி தமிழீழ விடுதலைக்காக
எனது உள்ளம் உயிர் உடல் உடமை அனைத்தையும் ஈந்து உறுதியோடு போராடுவேன் என்றும்
எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலை உளமார ஏற்றுஅவருக்கு என்றும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்படுவேன் என்றும் இதனால் உறுதி கூறுகின்றேன்
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

மதுரையில் வாழ்ந்த ஓவியர் நடராஜா அவர்களிடம் தலைவர் மற்றும் பேபி அண்ணா இருவரும் சென்று புலிச் சின்னம் அதாவது தமிழீழச்தேசியக்கொடிக்கான வரைவு தொடர்பாகக் கதைத்துள்ளனர்,
இலங்கை தமிழர்கள் மீது அதிகம் பற்றுக் கொண்ட இவர் உங்களிற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்,
அதற்கு தலைவர் தாங்கள் இயக்கம் ஆரம்பித்துயிருப்பது பற்றியும் சோழமன்னனின் கொடியில் புலிச் சின்னம் இடம் பெற்றது போன்று எங்கள் கொடியிலும் புலிச்சின்னம் இடம் பெற வேண்டும் அதற்காகத்தான் உங்களிடம் வந்ததாகாக் குறிப்பிட்டுளார், அதைக் கேட்ட அவர் முழு மனதோடு அதைச் செய்து தருவதாகக் சொல்லியுள்ளார்,
தொடர்ந்து தலைவர், பேபி .ரகு மூவரும் என்னை அடிக்கடி வந்து சந்தித்து தங்களின் விருப்பத்தை அவர்கள் சொல்ல அவர்களின் எண்ணத்தின் படி கால்கள் இருந்தால் நல்லாக இருக்கும் என்றேன் உடனே தம்பி அப்படியே வரையுங்கோ என்றார், 11 தோட்டாக்கள் என 33 தோட்டாக்களை வரைந்து அவர்கள் விருப்பப்படி கத்தி உள்ள இரண்டு துப்பாக்கிகளோடு ஒன்றுக் ஒன்று குறுக்காக வளைவின் பின்புறம் இருக்கும்படி வரைந்து கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்,
அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பு ஆரம்பிக்கும் போது அமைப்பின் மத்திய குழுவால் சாவொறுப்புக்குரிய குற்றம்; மற்றும் தண்டனை வழங்கக்கூடிய குற்றம்; என இரு வகைகளாக வரையறுக்கப்பட்டது.
01 . நிதிமோசடி ஆதாவது இயக்கப் பணத்தை அனுமதி இல்லாமல் செலவு செய்தல் பிறருக்குக் கொடுத்தல் துலைத்து விட்டதாக நடித்தல்,
02 .காட்டிக்கொடுத்தல் இயக்கம் மறைத்து வைத்து இருக்கும் ஆயுதம் பணம் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கும் குடும்பங்கள் பற்றியவர்களின் தகவல்களை எதிரிகளிற்கு தெரியப்படுத்துதல்,
03.பெண்கள் ரீதியான ஆண் பெண் உறவுகளில் ஈடுபடுதல் மற்றும் இயக்கத் தகவல்களை அவர்கள் மூலமாக எதிரிகளிற்கு தெரியப்படுத்துதல் என்பன சாவொறுப்பிற்கு உரிய குற்றறமாகும்.
அடுத்துதண்டனைக்கு உரிய குற்றம்;
சண்டை நேரங்களில் அனுமதி இன்றி பின்வாங்கி வீடுகளிற்கு ஓடித் தப்புதல், தவறுதலாக துப்பாக்கியால் சுடுதல், பொறுப்பு நிலையில் இருப்பவரின் கட்டளைக்கு கீழ்படியாமல் எதிர்த்துக் கதைத்தல், அவருக்கு அடிக்கக் கை நீட்டுதல், அல்லது சக நண்பர்களோடு சண்டையிடுதல் அடித்தல், தனிநபர் உடமைகள் மற்றும் குப்பித் தகடுககள், அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதம் அதன் உதிரிகளைக் கவனக்குறைவாகத் தொலைத்தல், கொடுக்கப்படும் கடமைகளை செய்யாமல் அலட் சியமாகத் திரிதல் என்பன தண்டனைக்கு உரிய குற்றமாக் கருதப்படும்.
இவ்வகையில் பெண்கள் ரீதியான பிரச்சனையில் ஈடுபட்டு அமைப்பின் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரன் வெளியேற்றப்பட்டுயிருந்தார்.

19/05/1982/அன்று பாண்டி பஜாரில் தலைவர், உமாமகேஸ்வரன் சண்டை நடைபெற்றது;
1982 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால ஆண் ,பெண் போராளிகள் தமிழகத்தில் ஒரு முகாமிலே வாழ்ந்தார்கள்.
அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளராக இருந்த திரு உமாமகேஸ்வரன் அடுத்து பெண் போராளி ஊர்மிலா இருவரும் மொட்ட மாடிக்கு மேல் ஒன்றாக இருந்தார்கள் என்று போராளி கலாபதி உறுதிப்படுத்தினார்.
மூத்த உறுப்பினர் சிலர் உண்மையை அறிவதற்காக கடுமையான விசாரணையை மேற்கொண்டனர்; பிரச்சனையை ஒப்புக் கொண்டால் நீங்கள் இருவரும் திருமணம் செய்து இயக்கத்தில் இயங்கலாம் என சொல்லப்பட்டது ஆனால் நாங்கள் பிழைவிடவும் இல்லை இயக்கத்தில் இருந்து விலகவும் மாட்டம் என இருவரும் அடம் பிடித்தனர்.
அதன்பின்னராக மத்திய குழு கூடியபோது பெரும் பாண்மையான வாக்குகள் தலைவருக்கு ஆதரவாக இருந்தன;அதன் அடிப்படையில் இருவரும் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அடுத்து உமாமகேஸ்வரன் வேறு இயக்கம் உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தகாலப் பகுதியில் எதிர்பாராதவிதமாக 19/05/1982 அன்றைய நாள் பாண்டிபஜாரில் அரச பஸ்தரிப்பு இடத்தில் இருவரும் சந்திக்கின்றனர்;
தலைவரும் போராளி ராகவனும்மற்றும் ஜீவக்குமாரும் பஸ் நிக்குமிடத்தைநோக்கி நடந்துவருகின்றார்கள்,
எதிர்பராத நேரத்தில் உமாமகேஸ்வரனை தலைவர் கண்டதும், தலைவர் முகுந்தன் என்று சொன்னதுதான் தாமதம் எந்த அனுமதியையும் போராளி ராகவன் எதிர்பார்கவில்லை;
உமாமகேஸ்வரனை நோக்கி ராகவன் சுடத்தொடங்கி விட்டார்; பதட்டம் அடைந்த உமா மகேஸ்வரனும் அவரோடு வந்த ஜெகதீஸ்வரன், சிவநேஸ்வரன், நிமலராஜன் மற்றும் கண்ணன் உமாமகேஸ்வரன் , அல்லது முகுந்தன் அங்காலப் பக்கம் 4பேர் அப்போது இவர்களில் நாலு பேரும் தலைவரை நோக்கி சுடுகின்றார்கள்; கண்ணனும் தலைவரை நோக்கிச் சுடத்தொடங்கிவிட்டார். இருந்தும் தலைவரோடு நின்ற ராகவன் குறிதவறாமல் சுடுவதில் பெரும் கில்லாடி உமாமகேஸ்வரனோடு வந்த கண்ணனைநோக்கி குறி தவறாமல் சுட்டார் ராகவன், பலமான காயம் ஏற்பட்டு துடிதுடித்துக்கொண்டு இருந்தார் கண்ணன்;
தமிழகத்தின் சனங்கள் அழுதகொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டு இருந்தார்கள்; உமாமகேஸ்வரனும் அவ் இடத்தை விட்டு ஓடிக் கொண்டேயிருந்தான். ஆனால் எதிர்மாறாக உமாமகேஸ்வரன் ஆட்கள் தொடர்ந்து சண்டையிட நினைத்து இருந்தால் நாலு பேரையும்போராளி ராகவன் தீர்த்துக்கட்டியிருப்பான் என்பது உமாமகேஸ்வரனிற்கு நன்கு தெரிந்து இருந்தது.அவர்கள் ஓடித்தப்பினார்கள்,
தலைவரோடு நின்ற போராளி ஜீவக்குமார் மட்டும்தான் தமிழகக் காவல் துறையினரிடம் சிக்காமல் தப்பிச் சென்றார்;
இவர் ஊடாகத்தான் தமிழகத்தில் இருந்த எமது ஆதரவாளர்களிற்கும் அனைத்துப் போராளிகளிற்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.இது நடந்து கொண்டு இருக்க உடனே அவ்விடத்திற்கு விரைந்த தமிழகக்காவல்துறை 4 பேரையும் பிடித்துக்கொண்டு சென்று விட்டது. அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து இருந்தனர். இது இப்படி இருக்க போராட்டத்தின் தீவிர ஆதரவாளர் ஐயா நெடுமாறன் ரூரிஸ் விசாவில் சென்று அவுஸ்திரேலியாவில் நின்றார்.
இத்தகவல் அவருக்குத் தெரிந்து விட்டது; அவர் உடனே தனது ஆதரவான வழக்கறிஞர்களிற்குத் தெரியப்படுத்தினார்; பிரபாகரனை விடுதலை செய்யும் வரை வீதியில் இறங்கிப் பாரிய ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கட்டளை வழங்கினார். அதனால் தமிழகம் பெரும் கலவரபூமியாக மாறியது. சென்னை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தலைவர் அவர்கள் வழக்கறிஞர் திரு கே எஸ் ராதாகிருஸ்ணன் அவர்களால் 05/08/1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடிய காரணத்தால் பிணையில் சென்று வீட்டுக் காவலில் வாழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதை அடுத்து நெடுமாறன் ஐயா தேசியத் தலைவரை அழைத்துச் சென்று மதுரையில் தங்கவைத்தார்.

இது இவ்வாறு இருக்க தேசியத் தலைவரை சிறிலங்காவிற்கு நாடு கடத்தும் நிலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு பல முயிற்சிகள் ஏற்பட்டன. அதில் ஒன்றைப் பார்ப்போம்….!
இது எமது மூத்த போராளிகளான சீலனின் முடிவு சென்னையில் உயரமான கட்டிடமாக விளங்கிய. எல்.ஐ.சி கட்டிடத்தின் உச்சியில் இருந்து 01 சீலன், 02 ரஞ்சன்லாலா ,03 புலேந்திரன், இவர்கள் மூன்று பேரும் ஒருதர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்வது என அவர்கள் முடிவு எடுத்தனர்.அப்படி செய்தால் கண்டிப்பாக இந்தியா அரசு இலங்கையிடம் இவர்களைக் கையளிக்க அல்லது நாடுகடத்த மாட்டார்கள் என்பதே சீலனின் கூற்றாக இருந்தது. அக்காலத்தில் தலைவருக்கு அடுத்த நிலையாகவும் தலைவர் உடைய தீவிர விசுவசமாகவும் இருந்தவர் சீலன் என்பதை எம்மால் மறக்க முடியாது.

ஆரம்பத்தில் எமது இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு உமா மகேஸ்வரனிடம் இருந்தது.
அவரைக் கலைத்த பின்னர் இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு சீலனினிடம் இருந்தது.சீலனின் வீரச்சாவிற்குப் பின்னர் இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு செல்லக்கிளி அம்மானின் கையில் இருந்தது . செல்லக்கிளி அம்மானின் வீரச்சாவிற்குப் பின்னர் இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு கிட்டு அண்ணையின் கையில் இருந்தது. கிட்டு அண்ணையின் விரச்சாவிற்குப்பிறகு இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு பொட்டுஅம்மானின் கையில் இறுதி 2009 மட்டும் இவரிடமே இருந்தது.
இந்த உண்மை தலைவரோடு நின்ற ஒரு சிலருக்கு மட்டும் தெரியும் என நினைக்கின்றேன். இதை அறிந்த பேபி அண்ணா அவர்கள் அந்தச் செயலை செய்ய விடாது தடுத்தது மாத்திரமன்றி தன்னால் இயன்றவரை செயற்பட்டு தலைவர் அவர்களை நாடு கடத்தும் ஆபத்தில் இருந்து தப்ப வைப்பதில் பெரும் பங்காற்றியவர் பேபி அண்ணா.16/07/1989 அன்று இனம் தெரியாக நபர்களால் கொழும்பில் வைத்து உமாமகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.அது அவர்களின் உள் வீட்டுப் பிரச்சனை என பின்னர் நாம் அறிந்தோம்அடுத்து ஊர்மிலா தனது சொந்த ஊரான வவுனியாவில் வாழ்ந்துகொண்டியருந்த வேளை மஞ்சட் காமாளை நோயால் சாவடைந்தார்.
உள் வீட்டுப்பிரச்சனை காரணமாக பாண்டி பஐாரில் தலைவருக்கும், உமாகேஸ்வரனிற்கும் இடையில் சண்டை நடந்த சண்டையின்போது தான் எமது அமைப்பிற்கும் எம் ஜீ ஆர் அவர்களிற்குமான உறவு மலர்ந்தது .
அச்சம்பவத்தின் போது இருவரையும் இந்தியப் பொலிஸார் கைது செய்தனர். அதை அடுத்து அவர்களை இலங்கை அனுப்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது அதுதொடர்பாக

01/06/1982 அன்று ஐயா பழநெடுமாறன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அக்கூட்டத்தில் பிரபாகரன் உட்பட போராளி முகுந்தன் எவரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எம் ஜீ ஆர் அவர்களிற்கும் எமது அமைப்பிற்குமான உறவு ஆரம்பம் ஆனது,அந்தத் தீர்மானத்தைக் காரணம் காட்டி எம் ஜீ ஆர் அவர்கள் இந்திய மத்திய அரசிற்கு எழுதிய கடிதம் தேசியத் தலைவர் உட்பட அனைத்துப் போராளிகளையும் காப்பாற்றியது.எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்பதிக்க மாட்டேன் என உறுதியோடு இருந்தவர் எம். ஜீ .ஆர் அன்றில் இருந்து M.G.R அவர்களிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமான உறவு ஏற்பட்டது.

இதேகாலம்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
02/07/1982 அன்று நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸ் படை மீது விடுதலைப் புலிகள் நடாத்திய மின்னல் வேகத் தாக்குதலில் 4 பொலிசார் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.;அதில் பல ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது, எவ்விதமான இழப்பும் ஏற்படவில்லை.
29/07/1982 ஜெ.ஆர் ஜேவர்த்தனாவின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்க்கும் முகமாக பொன்னாலைப் பாலத்திற்கு அருகாமையில் வந்து கொண்டிருந்த கடல் படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் படையினர் மயிர் இழையில் உயிர் தப்பினாலும் அப்பாலம் சேதம் அடைந்தது.
29/09/1982 அன்று இனவெறியன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை புதைத்து வெடிக்க வைத்தனர்.

27/10/1982 முதல் முதலாக தலைவரின் பாதுகாப்பிற்கு என இருவரை நியமிக்க வேண்டும் என விடுதலைப் புலிகளின் மத்திய குழு தீர்மானித்தது அதற்கு அமைவாக முதல் மாவீரன் சங்கர் மற்றும் குண்டப்பா இருவரும் தலைவரின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டார்கள்;
அதிலிருந்து தமிழீழம் சென்றதும் தலைவரின் உள் பாதுகாப்பு 75 ந்துக்கு மேற்பட்டவர்களும் வெளிப் பாதுகாப்பு என நிறையப் போராளிகளும் கடமையாற்றினார்கள்.
27/10/1982 அன்று அதிகாலை சீலன் தலைமையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப் புலிகள் தீடீர்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். அத்தாக்குதலில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்; பல பொலிசார் காயப்பட்டனர்; ஏனையவர்கள் தப்பி ஓடி விட்டனர்; அதில் 9 திறியோ, 303, இரண்டு இலகுரக ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
எமது தரப்பில் முக்கிய தளபதிகளான குண்டப்பா மற்றும் சீலன் உட்பட மூன்றுபேர் காயம் அடைந்தனர். அவ் முகாம் தாக்குதலில் காயம் அடைந்த பேராளிகளிற்கு நிர்மலா என்பவரின் வீட்டில் வைத்துத்தான் விடுதலைப் புலிகள் மருந்து கட்டினார்கள்.
எமது அமைப்பைச் சேர்ந்த அன்ரன் பல்கலைக்கழத்தில் படிக்கும்போது பேராசிரியரான நித்தியானந்தனோடு உறவு நிலை ஏற்பட்டு இருந்தது.நிதித்தியானந்தன் என்பவரின் மகள் தான் நிர்மலா அவர்களின் வீட்டில் வைத்துதான் சாவகச்சேரி பொலிஸ் ஸ்ரேசன் தாக்குதலில் காயப்பட்ட குண்டப்பா மற்றும் லெப். சீலன் இவர்களிற்கு மருந்து கட்டப்பட்டது.
அப்பொழுதுமயக்க மருந்து வேண்ட வேண்டிய தேவை இவர்களிற்கு ஏற்பட்டதால் அதை சிங்கராஜா?பாதர் ஊடாக கொழும்பில் இருந்து அதை வாங்கினார்கள். ஆனால் அதை முன்கூட்டிய அறிந்த சிங்களக் காவல்துறையினர் இப்படியான மருந்து வேண்டினால் தங்களிற்கு தெரிவிக்குமாறு கொழும்பில் இருந்த மருந்துக் கடைகள் அனைத்திற்கும் தெரியப்படுத்திவைத்து இருந்தார்கள்.அதனால் மருந்து வேண்டிக்கொண்டுபோன சிங்கராஜ பாதரின் விலாசம் சிங்களப் பொலிஸாருக்குக் கிடைத்தது .
அத்தகவலை அறிந்து கொழும்பில் இருந்து வந்த பொலிஸார் சிங்கராஜ பாதரை அவரின் யாழ்பாணத்தில் இருந்தவீட்டில் வைத்து கைது செய்து கடுமையான சித்திரவதையை மேற் கொண்டமைனால் சிங்கராஜா பாதர் நிர்மலா விட்டில்தான் காயப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெரியப்படுத்திவிட்டார். தகவலை அறிந்த பொலிஸார் நிர்மலாவின் விட்டிற்கு வேகமாகச் சென்றுகொண்டு இருந்தனர்….. இவ்விடயத்தை அறிந்த கிட்டு அண்ணை நிர்மலா வீட்டிற்குப்போய் தகவலைத் தெரியப்படுத்தி சீலனையும் குண்டப்பாவையும்அங்கே இருந்து வெளியேற்றுமாறு கட்டளை வழங்கினார் லெப் சங்கர் அவர்கட்கு……தகவலை அறிந்த சங்கர் கடமையை ஏற்றுக்கொண்டுஉடனேஅங்கே சென்று சிங்கராஜாபாதர் பிடிபட்டுள்ளார் உடனே”இடத்தை மாத்துங்கோ நீங்களும் பாதுகாப்பாக இருங்கோ” என சங்கர் சொல்ல உடனே அவர்கள் வேறு இடம் அவசர அவசரமாக அனுப்பி வைக்கப் பட்டார்கள்.
இருவரையும் வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டு, தானும் வெளியே செல்லத்தயாராக இருந்தவேளை….. பொலிசார் வீட்டிற்குள் புகுந்து சுடத்தொடங்கி விட்டார்கள்; சங்கரும் அவர்களை நோக்கிச் சுட்டுக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடத் தொடங்கினான்.
ஆனால் பலமான வெடி அவனது உடம்பில் பிடித்து இரத்தம் ஓடிக்கொண்டுயிருந்தது, இதை எமது ஆதரவாளரான செல்வன் சங்கரைக் கண்டதும் அவரைப் பாதுகாப்பாகக் கொண்டுபோய்…… செல்வன் சங்கரைக் கூட்டிக்கொண்டு போய் ஜெயராஜ் அவர்களிடம் ஒப்படைக்கின்றார், ஜெயராஜ் கூட்டிக்கொண்டுபோய் போராளி அன்ரனிடம் ஒப்படைக்கின்றார் அன்ரன்கொண்டுபோய் கிட்டண்ணைக்குத் தகவலைத் தெரியப்படுத்த கிட்டண்ணை சங்கரைப் பொறுப்பெடுத்து படகு மூலம் இந்தியா அனுப்பிவைத்தார்.

சங்கரை தப்பவிட்ட கோபத்தில் நிர்மலா வீட்டை முற்றுகையிட்டு அங்கே இருந்த நிர்மலாவின் தகப்பன் தாய் அனைவருக்கும் அடி போட்ட பொலிஸார் நித்தியானந்தாவின் மகளான நிர்மலாவை கைது செய்துகொண்டு போய் கொழும்பில் அடைத்தார்கள். 1983 வெலிக்கடைச் சிறைசாலையை சிங்ளக் காடையர்கள் உடைத்து தமிழ் கைதிகளை கொலை செய்த காரணத்தால் கொழும்பில் இருந்த தமிழ் கைதிகள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அதில் நிர்மலாவும் அங்கே காவலில் இருந்தார் இதில் குறிப்பிட்ட சங்கர் முதல் மாவீரனாக வீரச்சா அடைந்து விட்டார் குண்டாப்பா இப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடுயிருந்துள்ளார்
இதைப் பின்னர் பார்ப்போம்.
சங்கரின் விடயத்தை முன்னரே படித்து இருப்பீர்கள் தமிழகம் கொண்டு செல்லப்பட்டாலும்; அங்கே சிகிச்சை பலன் அழிக்காமல் தலைவரின் மடியில் இருந்தவாறே வீரச்சாவு அடைந்தார்,
08 27/11/1982 அன்று விடுதலைப் புலிகளின் முதல் மாவீரன் சங்கர் வீரச்சாவு அடைந்தார்.

சங்கர்பற்றி தலைவர் குறிப்பிடும்போது சங்கரை எனது மடியயில்தான் அவனின் தலையை வைத்திருந்தேன், வலிக்குது என துடியாய் துடித்துக்கொண்டுயிருந்தான் அப்பொழுது எங்களிற்கு மருத்துவ அறிவும் போதிய அளவில் காணாமல் இருந்தது அப்படி அவனின் உயிர் மிகவும் வலியில் இருந்து எனது மடியில் இருந்தே அவனின் உயிர் போனது அந்த வலியை நேரில் நான் பார்த்த காரணத்தால் முதல் நாள் வரும் எனது பிறந்தநாளை நான் கொண்டாடுவதே இல்லையென தனது உணர்வை போராளிகளிடம் தெரியப்படுத்தினார்
மதுரையில் வீரச்சாவு அடைந்தபின் தொடர்ந்து காவல் நிலையம் போய் ஒப்பம் இட்டு அங்கே இருப்பதைத் தலைவர் அவர்கள் விருப்பவில்லை; தமிழகப் பொலிஸாரின் கண்காணிப்பில் இருப்பதை விட தமிழீழம் சென்று இயக்கத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகக் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தமிழீழ மண்ணிற்கு வந்து சேந்தார் தலைவர்.
அங்கே சென்ற அவர் சும்மா இருக்கவில்லை; பல தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டுயிருந்தார்;

அக்காலப் பகுதியில்தான் தளபதி கேணல். கிட்டு அவர்கள் தாக்குதலிற்கு செல்வதற்கான காலம் தெருங்கிக் கொண்டே இருந்தது……..
இது இப்படியிருக்க29/02/1983 விடுதலைப் புலிகளை அழிக்கவென ஒரு இராணுவ அணியைஉருவாக்குவதற்கான கூட்டம் நடை பெறுவதற்காகற்காக ஏற்பாடு செய்யப்பட்டது,. யாழில் இருந்த அம் மண்டபத்தை சில மணி நேரத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர், அத்தோடுஅங்கே நின்ற ஜீப் ஒன்றும் சேதமானது.

இக்காலத்தில் தான் தனது திறமையை நிலைநாட்டுவதற்கான காலம் வந்தது கிட்டு அவர்கட்கு,
04/02/1983 அன்று போராளி அற்புதன் அல்லது பொன்னம்மான் தலைமையில் பரந்தன் உமையாள்புரம் மீதான தாக்குதலிற்கு விடுதலைப் புலிகள் அணி ஒன்று செல்கின்றது….. அதில் கேணல் கிட்டுவும் செல்கின்றார்,
தாக்குதலிற்கான திட்டம் தீர்மானிக்கப்படுகின்றது, அத்திட்டத்தின்படி வீதியில் நிலக்கன்னி வெடிகளைத் தாட்டு விட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருகின்றார்கள் போராளிகள், கண்ணிவெடிகளைக் கையாழும் அனுபவம் இவர்களிற்கு போதியளவு இல்லாமல் இருந்தது. இராணுவ வாகனம் இலக்கை அண்மிக்கும் நேரத்தில் அதைக் கண்டு மிரண்டு ஓடிய ஆட்டுக் குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடி வெடிக்க அனைத்துப் போராளிகளும் நிலை குலைந்து போகின்றார்கள்,
இதை அவதானித்த இராணுவம் இரு கவச வாகனங்களில் இருந்து போராளிகளைச் சுட்டுக் கொண்டு வருகிறார்கள், இவர்களிற்கு பின்வாங்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியின் பலத்தைக் கவனிக்காது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜீ3 துப்பாக்கியால் இராணுவக் கவசவாகனத்தை நோக்கிச் சுடுகின்றான்;
அவனின் இலக்குத் தவறவில்லை, சாரதி?உட்பட 4 இராணுவத்தினர் காயம் அடைந்தனர். அப்போது வாகனம் செயலற்றுப் போகின்றது, இராணுவம் நிலை குலைந்த வேளையில் கிட்டுவின் தலைமையில் விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக பின்வாங்கிச் செல்கின்றார்கள்.
18/05/1983 அன்று உள்ளூர் ஆட்சித் தேர்தலின் போது கந்தர்மட வாக்குச் சாவடியில் கூட்டுக் காவலில் ஈடுபட்டுயிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாருடன் நேரடியாக சாவால் விட்டு10 நிமிடங்கள் நடத்திய தாக்குதலில் இராணுவக் கோப்பிறல் ஜெயவர்த்தனா கொல்லப்பட்டார். மேலும் ஒரு இராணுவம், இரண்டு பொலிஸார் காயம் அடைந்தனர். அச்சமரில் T56 றைவுள் ஒன்றும் விடுதலைப் புலிகளிகளால் கைப்பற்றப்பட்டது .29/09/1982 அன்று இனவெறியன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணிவெடிகளை புதைத்து வெடிக்க வைத்தனர்
07/04/1983 இத்தாக்குதலிற்குப்பிறகு கிட்டு அவர்கள் செல்லக்கிளி அம்மானின் உதவியாகத் தலைரால் நியமிக்கப்பட்டார்.
அடுத்து லெப். செல்லக்கிளி அம்மான் தலைமையிலான அணி எப்படி திருநெல் வேலித் தாக்குதலை செய்தார்கள் என்பதை பார்ப்போம்,
தொடரும் அன்புடன் ஈழமதி