முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி – தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது கஞ்சிகூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இதன்போது பரிமாறப்பட்டது.
இதில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ,உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .
இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால்
2009ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழர் பொதுமக்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் இன்று ஆரம்பமாகியுள்ளது.

ஆண்டுதோறும் மே 11 – 12 முதல் 18ஆம் திகதி வரை இந்த நினைவு வாரம் உலகத் தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது.
இந்நினைவு வாரத்தின் போது இலங்கை வடக்கு – கிழக்கு பகுதிகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வுகள், அமைதிப் பேரணிகள், மெழுகுவர்த்தி அஞ்சலிகள், மத பிரார்த்தனைகள் மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
உயிரிழந்த பொதுமக்கள்
உயிரிழந்த பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைவுகூரும் வகையில் பல சமூக அமைப்புகள் மற்றும் தமிழர் அமைப்புகள் இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளன.

2009 மே மாதத்தில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டம் இலங்கை வரலாற்றின் மிகத் துயரமான மனிதாபிமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததுடன் இடம்பெயர்ந்ததாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
